செவ்வாய், அக்டோபர் 20, 2020

தேசம்

img

புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு... இந்தியாவில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று...

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 15 நாட்களாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு சராசரியாக 20 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. 

இந்நிலையில் புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 27,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்தியாவின் அதிகபட்ச கொரோனா எண்ணிக்கை (தினசரி) ஆகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 521 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவிலான கொரோனா பட்டியலில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில் முதலிரண்டு இடங்களில் உள்ளது.   

;