வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

தில்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை...  

தில்லி 
தில்லி மாநில சுகாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவருக்கு நேற்று இரவு உடலில் ஆக்சிஜன் குறைந்து கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  கொரோனா சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று மதியம் சத்யேந்தருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், சாதாரண காய்ச்சல் தான் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஓய்வின்றி தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் சுழன்றதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பூரண குணமடைந்து சத்யேந்தர் ஜெயின் தனது பணியை மீண்டும் தொடங்குவார் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இதுவரை 42,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1400 பேர் பலியாகியுள்ள நிலையில், 16427 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.    

;