வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

துலாபாரம்.... பினராயி விஜயன் - மோடி

கொரோனா குறித்து நம் நாட்டின் இரு தலைவர்கள் நேற்று, 19.03.2020 அன்று வெளியிட்ட, மக்களோடு பகிர்ந்து கொண்ட கருத்துக்களை துலாபாரத்தில் மதிப்பீடு செய்க.

பினராயி விஜயன்

1.    கொரோனா நோய் தொற்றினை எதிர் கொள்ள ரூ.20000/= கோடி திட்டம்.

2.    குழந்தைகளுக்கு மதிய உணவு 

3.    கைகழுவும் சுத்திகரிப்பு திரவம் மாநில அரசே தயாரிக்கும்.

4.    மாநிலத்திற்கு தேவையான முக கவசங்கள் சிறையிலேயே தயாரிக்கப்படும்.

5.    வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் கண் காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள்.

6.    இணையதள அலைவரிசைகள் சரி செய்து வேகப்படுத்துவது.

7.    மக்களுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவது.

8.    தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான புத்தகங்களை ஏற்ப்பாடு செய்வது.

9.    மக்களுக்கான உணவை உத்தரவாதப்படுத்துவது.

10.    பொது விநியோக திட்டத்திலுள்ள ரேசன் பொருட்கள் ஒரு மாதம் எல்லோருக்கும் இலவசமாக வழங்குவது.

11.    இருபது ரூபாய்க்கு உணவு தயாரித்து வழங்க ஆயிரம் உணவகங்கள்.

12.    உடல் நலம் பேணும் பேக்கேஜ்.

நரேந்திர மோடி

22-ம் தேதி மக்களே தாங்களாகவே வீட்டில் அடைந்து கொண்டு தனிமைப்பட்டுக் கொள்ள வேண்டும். அன்றுமாலை ஐந்து மணிக்கு வீட்டு முன்பு, பால்கனி, போன்ற இடங்களில் நின்று கைகளை தட்டுவது, ஏதாவது உபகரணங்களைக் கொண்டு ஒலி எழுப்புவது.

ஆக, வெறும் கையில் முழம்போடலாம், மணலில் கயிறு திரிக்கலாம். இலவச ஆலோசனை அள்ளிவிடலாம். மறுபக்கம் உண்மையும் உழைப்பும் நம்பிக்கையும் தெம்பூட்டும் மனிதாபிமானத்தோடு கூடிய அர்ப்பணிப்போடு கூடிய செயலும். 
எடை போடுவது மக்கள் தான்.

- எம்.அகமது உசைன், நாகர்கோவில்

;