வியாழன், டிசம்பர் 3, 2020

india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கொரோனா ஊரடங்கி னால் துயரங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் இந்த முக்கியமான தேவைகளை மத்திய அரசாங்கம் அமலாக்க வேண்டும் என விரும்புகிறோம்:

1. வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வீதம் இந்த கொள்ளை நோய் காலத்தில் நேரடியாக தரப்பட வேண்டும்.

2. அடுத்த 6 மாதங்களுக்கு அனைத்து தனி நபர்களுக்கும் மாதம் 10 கிலோ உணவு தானியங் கள் இலவசமாக தரப்படவேண்டும்.

3. அனைத்து இடம்பெயர் தொழிலாளர்களும் தமது சொந்த ஊருக்குஇலவசமாக அழைத்துச் செல்லப் பட வேண்டும்.

4. தன்னிச்சையாக எடுக்கப்பட்ட அனைத்து கொள்கை முடிவு களையும் குறிப்பாக தொழிலாளர் நல சட்டங்களை சிதைக்கும் முடிவுகள் உட்பட அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.

5. சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட அனைத்து பயிர் களும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.இதே போல சிறிய வனப்பயிர் களையும் கொள்முதல் செய்ய வேண்டும். அடுத்த நடவுக்கு தேவையான விதைகள், உரம் மற்றும் ஏனைய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தரப்பட வேண்டும்.

6. இந்த கொள்ளை நோயை எதிர்கொண்டு போராடுவதில் முன்களத்தில் உள்ள மாநில அரசாங்கங்களுக்கு தேவையான கணிச மான நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

7. இந்த கொள்ளை நோய் பிரச்ச னையில் மதத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.அமைதியான வழியில் போராடி யவர்களையும் மாற்று கருத்து வெளிப்படுத்தியதற்காகவும் தேசத் துரோகம்/ தேசிய பாதுகாப்பு/  யு.ஏ.பி.ஏ. (சட்டவிரோத தடுப்பு) போன்ற ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். 

8. அனைத்து அரசியல் கைதிகளையும் குறிப்பாக காஷ்மீரில் சிறைக்குள் மற்றும் சிறைக்கு வெளியே காவலில் வைக்கப் செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட  வேண்டும்.

;