வியாழன், அக்டோபர் 22, 2020

தேசம்

img

இந்திய நெடுஞ்சாலைகள்... இனி உள்நாட்டு முதலாளிகளுக்குதானாம்...

புதுதில்லி:
நெடுஞ்சாலை சுங்க வசூல் ஒப்பந்தங்களை, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு, குறைந்த தொகைக்கு வழங்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை வைத்து சுங்கக் கட்டணம்மூலம் பணம் ஈட்டி வருகிறது. பன்னாட்டு சுங்க வசூல் நிறுவனங்களிடம் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு நீண்டகால அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.இதற்கு முன்பு, 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்குவரி குழுமத்திற்கு ரூ. 9 ஆயிரத்து 700 கோடிக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த கியூப் ஹைவேஸ் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரத்து 11 கோடிக்கும் சுங்க வசூல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.இந்நிலையில், பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு பெருமுதலாளிகளை ‘வளர்த்து’ விட மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர்நிதின் கட்காரி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதாவது, உள்நாட்டு நிறுவனங்களையும், முதலீட்டாளர் களையும் ஈர்க்கும் வகையில், ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் குறைவான தொகைக்கு நெடுஞ்சாலைகளை சுங்கக் கட்டண வசூலுக்கு வழங்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி அளித்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடிதான் என்றில்லை. ரூ. 1,500 கோடி கொடுத்தால் கூட சுங்க வசூல் ஒப்பந்தங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலோட்டமாக பார்த்தால் இது சரியான நடவடிக்கையாகவே தெரியும். ஆனால், மக்களுக்கு இதனால் எந்த பயன்? என்றுசமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது, இனிபன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க முடியாது என்பது ஒருபாதி உண்மை. மற்றபடி சுங்கச் சாவடிகொள்ளை எப்போதும் போலத் தானே நடக்கப் போகிறது? என்றுகேட்கும் அவர்கள், இதில் வெளிநாட்டு முதலாளியாக இருந்தால் என்ன, அல்லது பாஜகவுக்கு நெருக்கமான உள்நாட்டு முதலாளியாக இருந்தால்தான் என்ன? என்றுகுறிப்பிட்டுள்ளனர்.உள்நாட்டு முதலாளிகளுக்கான ஒப்பந்தத் தொகையை ரூ. 2 ஆயிரம் கோடியாக குறைத்த மோடி அரசு, உள்நாட்டு சிறு வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள், வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைக்கு சுங்கக்கட்டணக் குறைப்புக்கு உத்தரவாதம் அளிக்குமா? அல்லது சுங்கச்சாவடி கட்டணத்தையே ரத்து செய்யுமா? என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர்.

;