வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

போட்டியாளராக இல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவோம்...

புதுதில்லி:
இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளும் போட்டியாளர் களாக இல்லாமல், ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சீனத் தூதர் சன் வீடோங்கூறியுள்ளார்.

சீன தூதரகத்தின் யூடியூப் சேனலில், தூதர் சன் வீடோங் 18 நிமிட வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதலை விடஅமைதியே தேவை; பேச்சுவார்த்தைகளின் மூலம் சிக்கலான பிரச்சனைக்கு ஒரு ‘நியாயமான தீர்வை’ கண்டுபிடிக்கும்வரை, சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியைப் பேணுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என சன் வீடோங் அழைப்பு விடுத்துள்ளார்.

“இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் ‘துண்டிக்க’ வேண்டும்; ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட’ பொரு களை விலக்க வேண்டும் என்றஇந்தியாவின் சில தடைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சீன நிறுவனங்கள் மற்றும்இந்திய நுகர்வோர் ஆகிய இருவருக்குமே நியாயமற்றதாக இருக்கும்” என்று குறிப்பிட் டுள்ள வீடோங், “இந்தியாவும் சீனாவும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் சமமாக கருதுவதன் மூலம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், “இரு தரப்பினரும் ‘பரஸ்பரம்’ முக்கிய நலன்களையும் முக்கிய அக்கறைகளையும் மதிக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

;