புதன், அக்டோபர் 21, 2020

தேசம்

தீக்கதிர் முக்கியச் செய்திகள்

ஆசிரியர் திறனுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

                      ****************

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

                      ****************

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

                      ****************

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில்முறைகேடு நடந்த விவகாரத்தில், தமிழகத்தில் இதுவரை ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில் மத்திய அமைச்சர்  தெரிவித்தார்.

                      ****************

சென்னை விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.

                      ****************

ஐபிஎல் அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களையே நியமிக்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.

                      ****************

நீட் தேர்வில் மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவிகித வினாக்கள் கேட்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

                      ****************

ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

                      ****************

இஸ்ரேல் உடன் மத்திய கிழக்குநாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் பக்ரைன் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான நிகழ்ச்சி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

;