செவ்வாய், அக்டோபர் 20, 2020

தேசம்

img

மகாராஷ்டிராவில் கொரோனா  பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது.... 

மும்பை 
நாட்டின் வர்த்தக நகரை (மும்பை) பெற்றுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்கடங்காமல் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 82 ஆயிரத்து 868 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2969 பேர் உயிரிழந்துள்ளனர். 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகள் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை தாறுமாறாக உயரும் அபாயத்தில் உள்ளது.  

குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் மண்டலமான மும்பை பகுதி கொரோனாவால் உருக்குலைந்துள்ளது. அங்கு இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1154 பேர் பலியாகியுள்ளனர். மும்பைக்கு அடுத்து புனே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு  5 ஆயிரதத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பாதிக்கப்பட்டு 274 பேர் பலியாகியுள்ளனர்.   மற்றொரு பெரிய நகரான நாக்பூர் குறைந்தளவு கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு 500-யை இன்னும் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

;