புதன், அக்டோபர் 28, 2020

தேசம்

img

மகாராஷ்டிராவில் லேசான அளவில் நிலநடுக்கம்...

மும்பை
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் இன்னும் பரவல் வேகம் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை 8.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,195 பேர் பலியாகிய நிலையில், 5.98 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

ஏற்கெனவே கொரோனா பாதிப்புடன் திணறி வரும் மகாராஷ்டிராவில் இன்று காலை திடீரென லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை நகர பகுதியிலிருந்து வடக்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. லேசான அளவில் நிலநடுக்கம் என்பதால்  சேதவிபரம் பற்றிய முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

;