செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தேசம்

img

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 56 கோடி வரவு; 10 கோடி செலவு....

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 56 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும், குறிப்பாக பிரதமர் மோடியின் ‘பிஎம்-கேர்ஸ்’ஸூக்கு எவ்வளவு நிதிவந்துள்ளது; அதில் எந்தெந்த வகையில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார். பிஎம்- கேர்ஸ் நிதி தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரில், முதல்வர்நிவாரண நிதிக்கு கடந்த மார்ச் 24 முதல் மே 7 வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து மொத்தம் 56 கோடியே 4 லட்சத்து 38 ஆயிரத்து815 ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ்பாகல் அறிவித்துள்ளார்.

இந்த நிதியிலிருந்து, மாவட் டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 10 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் செலவிடப்பட்டு உள்ளதாக கூறியுள்ள பாகல், “அரசின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் நிதி அளிக்கும் போது அதன் கணக்குகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதற்காகவே இதை அறிவித்துள்ளேன்” என்றும்குறிப்பிட்டுள்ளார். 

;