சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

வலைப்பதிவு : ஜம்மு - காஷ்மீரில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லை

370வது பிரிவு நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையிலும் ஜம்மு - காஷ்மீரில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லை.நாடாளுமன்றத்தில் மோடி அரசாங்கம் கூறியதற்கு முற்றிலும் மாறாக, காஷ்மீரில் உண்மை நிலைஎன்னவெனில், தேசத்தின் இதர பகுதிகளில் ஆறு ஆண்டுகளாக உள்ளது போலவே முன்னேற்றம் இல்லை. ‘அச்சே தின்’ - நல்ல காலம் வருகிறது எனும் பொய்யானவாய் சவடால்கள் மற்றும் வெற்றுகூச்சல்தான் உள்ளது. கோடிக்கண
க்கான மக்கள் வாழ்வாதாரத்தைமீள முடியாமல் தவிக்கின்றனர்.

சீத்தாராம் யெச்சூரி

=======

பயோகான் எனும் இந்திய நிறுவனம் கியூபாவின் சி.ஐ.எம். எனும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியItolizumab எனும் மருந்தை  கோவிட் நோயாளிகளுக்கு தருவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லேசானஅல்லது கடுமையான அறி குறிக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம். இந்தியாவில் இந்த மருந்தின் பெயர் Alzumab.

பத்திரிக்கையாளர் என்.ராம்

==============

வீட்டு காவலில் இருந்த பொழுது அரசாங்கம் எனது பேச்சுரிமையை பறிக்க முயன்றது. நான் வாய் மூடி மவுனமாக இருக்கஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு நிர்பந்தித்தது. மறைமுகமாக உளவியல் சித்ரவதை செய்தது.

- வயர் இதழ் பேட்டியில் உமர் அப்துல்லா

=====

ராம் தேவின் பதஞ்சலி, ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1200 கோடி கடன் தந்துள்ளது. ஆனால் ருச்சி சோயா வங்கியிடம் வாங்கி திருப்பி கட்டாத ரூ. 700 கோடி கடன் தள்ளுபடி. அதனை திரும்பப்பெற வங்கி 
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கூட்டு களவாணிகளுக்கு‘ஆச்சே தின்’ அமோகமாக உள்ளது.

- பிரசாந்த் பூஷண்

============

ஆகஸ்ட் 5ல் ராமர் கோவில் பூமிபூஜை விழாவில் பங்கேற்க இருந்த ஒரு அயோத்யா அர்ச்சகருக்கு கோவிட் தொற்று; 16 காவல்துறையினருக்கும் தொற்று.

- என்.டி.டி.வி. செய்தி

============

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இது போதாது என்று இப்பொழுது தொலைதொடர்பு விமானப் போக்குவரத்துத் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொலை தொடர்பு துறையில் ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல் பணமும் இல்லாமல் முடங்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது. மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து  விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன். மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை.

 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

#######

தொகுப்பு : அ.அன்வர் உசேன்

 

;