செவ்வாய், அக்டோபர் 20, 2020

தேசம்

img

கிரிக்கெட் தோல்விக்கு காவிச் சீருடையே காரணம்...

ஸ்ரீநகர்:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது.

உலகக் கோப்பை போட்டித்தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வந்தஇந்திய அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. உலகக் கோப்பை தொடரில் 27 ஆண்டுகளாக இங்கிலாந்திடம் தோற்காத அணி பெருமையையும் இந்தியா இழந்தது.இந்திய அணியின், இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை கூறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, இந்திய அணியின் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றேகூட வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைவதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஜெர்சி’ (சீருடை) தான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு காலமும் நீல நிறச் சீருடை அணிந்தே இந்திய வீரர்கள் விளையாடி வந்தனர். ஆனால், இங்கிலாந்து போட்டியின்போது, அவர்களின் சீருடை காவி வண்ணத்திற்கு மாற்றப்பட்டது. பாஜகவின் காவிமயமாக்கும் திட்டத் தின் ஒருபகுதியாகவே ஜெர்சி மாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் தன. இதையே தனக்குரிய வகையில், மெகபூபா முப்தி சாடியுள்ளார்.

;