திங்கள், அக்டோபர் 26, 2020

பேஸ்புக் உலா

img

இட ஒதுக்கீட்டில் வருகிறவர்கள் அத்தனைபேரும் "ஜஸ்ட் பாஸ் வெங்காயங்களா"?


அப்படித்தான் தினமலர் Dinamalar - World's No 1 Tamil News Website கடிதம் என்கிற பெயரில் ஒரு 'கருத்தை' முன் வைத்திருக்கிறது.தினமலரின் வன்மம் ஒரு கடிதமாக வடிவெடுத்து வெறுப்பை வீசியிருக்கிறது.

நான் ஏற்கனவே இட ஒதுக்கீடு குறித்த பிரச்சனைகள் பற்றி எழுதியிருந்த முகநூல் பதிவின் ஒரு பகுதியை மீண்டும் பதிவிட விரும்புகிறேன்

-------++++++++++++++++

'மெரிட்' என்னும் மாரீச மான்!

நீதிமன்றங்கள் மற்றும் அதிகார பீடங்கள் பெரும்பாலும் சமூக நீதிக்கு எதிராக நிற்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் முன்வைக்கும் வாதம் மெரிட் என்பதுதான்.மாணவர் சேர்க்கைக்கு மெரிட் என்று பேசுகிறார்கள்.மெரிட் என்றால் மதிப்பென் என்கிறார்கள்.

ஆனால் சேர்க்கையின்போது முதலிடம் பெற்றவர்கள் தொடர் படிப்புகளில் முதலிடம் தான் பெற்று இருக்கிறார்களா?

அப்படி முதலிடம் பெற்றவர்கள் இந்தியாவில் மக்களுக்குத்தான் சேவை செய்கிறார்களா? அல்லது தனியார் அமைப்புகளின் லாபம் பெருக்க உதவுகிறார்களா? அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்களா? என்று அரசு இதுவரையிலும் ஆய்வு செய்து இருக்கிறதா? அப்படி ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றங்கள் இதுவரை கூறி இருக்கிறதா?

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள்,கல்லித்துறை நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் இவர்களெல்லாம் படிக்கிற காலத்தில் முதலாவது மாணவர்களாகவே வந்தவர்களா என்பது குறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா?

அரசு ஏராளமாக செலவு செய்து சாதாரண ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை கொட்டி பலரையும் படிக்க வைக்கிறது.ஆனால் அந்த மக்களின் சேவையில் இந்த மெரிட்டில் வந்தவர்கள் பணிபுரிகிறார்களா?

தர்க்க ரீதியான இந்த கேள்விகளுக்கு தரவுகளின் மூலம் விடை தேடுவதற்கு அரசு அமைப்புகளும் நீதிமன்றங்களும் இன்றுவரை முயற்சி செய்திருக்கிறார்களா?

Kanagaraj Karuppaiah

;