வியாழன், அக்டோபர் 22, 2020

பேஸ்புக் உலா

img

நீதிபதியும் விமர்சனமும்...

நீதிமன்ற  அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தலைமை நீதிபதி போப்டே ஒரு பிஜேபி தலைவரின் பைக்கில் முகக் கவசமும் தலைக் கவசமும் அணியாமல் அம்ர்ந்திருக்கும் படத்தை டிவிட்டரில் அவர் வெளியிட்டதுதான் அவர் செய்த ‘குற்றம்’.
வளர்ந்த நாடுகளில் நீதி மன்ற அவமதிப்புச் சட்டமே நீக்கப்பட்டு விட்டது என எழுதும் நீதிபதி ஏ.பி. ஷா ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
1980களில் நடந்த ஸ்பைகேட்சர் வழக்கில் தீர்ப்பை அளித்த 6 நீதிபதிகளின் படத்தை தலைகீழாகப் போட்டு ‘5 கிழட்டு முட்டாள்கள்’ என்று விமர்சித்தது ஒரு பத்திரிக்கை. இது குறித்து அந்த 6 பேரில் ஒருவரான மூத்த நீதிபதியின் கருத்தைக் கேட்ட போது அவர் சொன்னது இதுதான்:
“நான் கிழவன் என்பது உண்மைதான். ஆனால் முட்டாளா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. இதை நீதிமன்ற அவமதிப்பாக நான் கருத வில்லை.”
ம்ம்ம்ம்.....

Vijayasankar Ramachandran

;