சனி, செப்டம்பர் 26, 2020

பேஸ்புக்உலா

img

வலைப்பதிவு : இவர் யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருப்பது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.  சுமார் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து  ரசிக்கிறார். அதுவும் கொரனோ காலத்தில்! இந்த இரு சக்கர வாகனம் எண்: CG05BP0015. இது நாக்பூர் பா.ஜ.க. தலைவர் சோன்பா முசாலேயின் மகன் ரோஹித் சொனாப்ஜி முசாலேக்கு சொந்தமானது. உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் இன்னாள் தலைமை நீதிபதிகளின் சில தீர்ப்புகளை இது தெளிவாக்குகிறது.
-அஷோக் தவாலே, மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இது வரை பிஎம். கேர்ஸ் நிதி மூலம் 1340 சுவாச கருவிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஜுன் இறுதிக்குள் 60,000 சுவாச கருவிகள் தரப்படும் என பா.ஜ.க. தலைவர் நட்டா 21.06.2020 அன்று கூறினார்.  மீதமுள்ள 58,660 கருவிகள் குறித்து  நட்டாவிடம் கேள்வி கேட்கும் தைரியம் ஊடகங்களுக்கு உள்ளதா என்பதை பார்ப்போம்.
- சாகேட் கோகலே, இதழாளர்

;