ஞாயிறு, அக்டோபர் 25, 2020

பொருளாதாரம்

img

2020-ல் இந்தியாவின் ஜிடிபி 3.1 சதவீதமாக குறையும் - மூடிஸ் கணிப்பு

இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டில் 3.1 சதவீதம் குறையும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

இந்தியாவின் ஜிடிபி ஏற்கனவே சரிவு கண்டுவந்த நிலையில், தற்போது கோவிட்-19 பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை, அவர்களின் தேவையும் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் விநியோக சங்கிலியும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டில், 3.1 சதவீதம் குறையும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. 
 

;