திங்கள், அக்டோபர் 26, 2020

பொருளாதாரம்

img

இந்தியாவுக்கு சீன நிறுவனம் பாராட்டு!

உலகத்திற்கே மருந்துப் பொருட்கள் விநியோகம்

புதுதில்லி, ஜூன் 23- கொரோனா காலத்தில் உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந் தியா மருந்து விநியோகம் செய்து மதிப்பு டன் திகழ்வதாக சீன மருந்து நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்-கை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம், ஷாங்காய் கோவாப்ரேஷன் ஆர்கனை சேஷன் (Shanghai Cooperation Organisation) நிறுவனம் ஆகும். இதன் பொதுச்செயலாளராக விளாடிமிர் நோரோவ் என்பவர் உள்ளார்.

இவர், ஐ.நா.வின் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வானதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அப்போதுதான், “கொரோனா காலத்தில் இந்தியா 133-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்து வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை அதன் தனித்துவத்தை வெளிக்காட்டுகிறது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள திறமைமிக்க விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த கொரோனா வைரஸ் குறித்து வலுவான ஆராய்ச்சியை முன்னெடுத்து சரியான மருந்தைக் கண்டறிவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 

;