திங்கள், அக்டோபர் 26, 2020

மாநிலங்கள்

img

மகாராஷ்டிராவில் சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை

இந்தியாவில் முதன் முறையாக மகாராஷ்டிராவில் சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாவே வாங்க முடியும். புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புகையிலை பொருள்கள் பிரிவு 7 விளம்பரம் மற்றும் வர்த்தக உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துதல் சட்ட 2003 ன் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என சுகாதார முதன்மை செயலாளர் மருத்துவர் பிரதீப் வியாஸ் கூறியுள்ளார். புகைப்பிடித்தல் இதய நோய்களையும், புற்று நோயையும் உருவாக்குகிறது. இதனால், இந்த உத்தரவின் அடிப்படையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர். இந்த உத்தரவிற்கு அம்மாநிலத்தில் உள்ள மருத்துவராக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இளைஞர்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் குறைய உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

;