செவ்வாய், அக்டோபர் 20, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் மேலும் 3 பேருக்கு கொரோனா

அவிநாசி, ஆக. 3-  அவிநாசி பகுதியில் மேலும் 3 பேருக்கு ஞாயி றன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதி ராக்கியா பாளையத்தில் 16 வயது சிறு வன், 9 வயது சிறுமி மற்றும் நம்பியாம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த 33 வயது பெண் என மொத்தம் 3 பேருக்கு ஞாயிறன்று கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதையடுத்து, மூவரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும், பாதிக் கப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர்.

;