வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

முன்னாள் எம்எல்ஏ கோ.ப.வெங்கிடு மறைவு அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்

கோபி, செப். 24- திமுவின் முன்னாள் சட்டமன்ற உறுப் பினரும், மொழிப்போர் தியாகியுமான கோ.ப.வெங்கிடு மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோபிச்செட்டிப் பாளையத்தில் அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளைம் சட்டமன்ற தொகுதியின் முன் னாள் உறுப்பினரும், மொழிப்போர் தியா கிமான கோ.ப.வெங்கிடு புதனன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமி ழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்புராயன், திமுக மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கி ரஸ், மதிமுக, விசிக, திக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;