வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 14- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்க சாவடிகளில் அதிக கட்டண உயர்வை கண்டித்தும், தேசிய நெடுஞ்சாலை களில் கட்டண கொள்ளைக்காகவே உருவாக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி களை அப்புறப்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் விசுவாசபுரம் பகுதியில் உள்ள நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். துணை பொதுச்செய லாளர் எஸ்.பரமசிவன், மாவட்ட பொருளாளர் ஆசீர் ஆகியோர் பேசினர். இதில் சித்திக், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கோவிட் 19 ஊரடங்கால் பொரு ளாதார ரீதியாக கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு சாலை வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;