வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்\குழித்துறை, ஜூலை 6- கொரோனா காலத்தில் நாட்டு மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று குமரி மாவட்டம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எ.வி.பெல்லார்மின், எம்.அகமது உசேன், மாநகர செயலாளர் மோகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  குழித்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற  உறுப்பினர் சுனில் குமார் தலைமை தாங்கினார், மார்த்தாண்டம் வட்டார குழு செயலாளர் அனந்தசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், அப்புகுட்டன் பிள்ளை, ஸ்ரீகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் வெட்டுவெந்நி பத்திர பதிவு அலுவலக முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு கிளை செயலாளர் ஜுலியட்மெர்லின்ரூத், மர்த்தாண்டம் வட்டார குழு உறுப்பினர் மதன்மோகன்லால் , மற்றும் சம்பத் கலந்து கொண்டனர். மேலும் திருத்துவபுரம் மற்றும் படந்தாலுமூடு பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குழித்துறை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜகுமார் , விவசாய சங்க வட்டார செயலாளர் ஜனார்த்தனன், படந்தாலுமூடு பணிமனை கிளை செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, விஜயமோகனன், எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், என்.உஷா பாசி, என்.எஸ்.கண்ணன், கே.மாதவன், ஆர்.லீமாறோஸ், எஸ்.ஆர்.சேகர், கே.தங்கமோகன் உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

;