புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

கொரோனா காலத்தில் கல்விக் கட்டண வசூலைக் கண்டித்து எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை.14- ஊரடங்கு காலத்தில் அரசு உத்த ரவை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பிரிஸ்கில் தலைமையில் தடிக்காரன்கோணம் சந்திப்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பதில் சிங்  பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் முபீஸ் உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டணம் கேட்டு வற்புறுத்தி எட்டாம் வகுப்பு மாணவியை தற் கொலைக்கு தூண்டியதை கண்டித்தும், சிபிஎஸ்இ பாடப் பகுதி களில் மதசார்பின்மை , குடியாட்சி உள்ளிட்ட பகுதிகளை நீக்கியதை கண்டித்தும், பாலியல் சமத்துவ கல்வியை பாடத்திட்டமாக்க வலி யுறுத்தியும் முழக்கமிட்டனர்.

;