செவ்வாய், செப்டம்பர் 22, 2020

மாவட்டங்கள்

யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை,  ஜூன் 15- கோவை சாடிவயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயி ரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த போட் டபடி ஆதிவாசிகள் கிரா மத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் என்பவர் வெள்ளி யன்று இரவு இயற்கை உபாதைகளைக் கழிக்க வீட்டிற்கு வெளியே வ துள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த ஒற்றைக் காட்டு யானை அவரைத் தாக்கி தூக்கி வீசி உள்ளது. இதில், காலில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் எழுப்பி உள் ளார். இதனையறிந்து வந்த கிராம மக்கள் யானையை விரட்டி, அவரை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட் டார். எனினும் வழியி லேயே நஞ்சம்மாள் உயி ரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது.  யானை தாக்கி நஞ்சம்மாள் உயிரிழந்த தால், முதல் கட்டமாக வனத்துறையினர் அவ ரின் இறுதிச் சடங்கிற்கு ரூ.50,000 அவரது உறவி னர்களிடம் வழங்கியுள் ளனர். ஆதிவாசிகள் கிரா மத்தில் யானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;