வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

கல்லார்குடி பகுதியில் நில அளவை - பழங்குடியின மக்கள் போராட்டம் வெற்றி

பொள்ளாச்சி, செப். 27- பொள்ளாச்சியை அடுத்த வால் பாறை அருகே உள்ள கல்லார்குடி பழங்குடியின மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையான, மாற்று இடத் திற்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினரால் நில அளவை செய் யப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த வால்பாறை அருகே  கல்லார்குடி வன கிராமம் அமைந் துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட  பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கன மழையினால் வால்பாறை, கல் லார்குடி உள்ளிட்ட பல இடங்க ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமானது. பின்னர் அம்மக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறை சார்பில் மாற்று தங்கு மிடம் தாய்முடி எஸ்டேட் குடியி ருப்பு பகுதியில் ஏற்பாடு  செய்யப்பட் டது.  இதன் பின்னர் தங்களது முன் னோர்கள் வாழ்ந்த, பூர்விக இட மான கல்லார்குடி அருகே உள்ள தெப்பகுளமேடு பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டுமென பல முறை வனத்துறை, வருவாய்த் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வனத் துறை, வருவாய்த் துறை கண்டு கொள்ளாததால்,  கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று பழங்குடியின மக்கள் வனத்திற்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து அரசியல் கூட்டியக் கத்தினர், பொள்ளாச்சி சார் ஆட்சி யர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் ஆகி யோரிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.  மேலும், இதுதொ டர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனில்,  செப். 3 ஆம்  தேதியன்று வனத்துறை அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டத் தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநா தன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வனத்துறையி னர், வருவாய்த் துறை, காவல்துறை  அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டியக்கம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், ஒரு  வார காலத்திற்குள் பட்டா வழங்க  நடவடிக்கை எடுக்கப்படுமென, வருவாய்த் துறையினர் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து சனியன்று வனத்துறை ஒத்து ழைப்புடன் கல்லார்குடி அடுத்த தெப்பகுளமேடு பகுதியில் வரு வாய்த் துறையினர் நில அளவை யர்களைக் கொண்டு நிலப்பட்டா வழங்க நிலங்களை அளந்து கொடுக் கும் பணியில் ஈடுபட்டனர். இதனை  பொள்ளாச்சி அனைத்துக் கட்சி கூட்டியக்கத்தினர், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் பழங்குடி யின மக்கள் வரவேற்றுள்ளனர்.

;