புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

அடகுவைத்த தாலியை மீட்காத கணவன் கொலை

கோவை, செப்.29  -  அடகுவைத்த தாலியை மீட்டு தராத கணவனை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெரைட்டி ஹால் அருகே யுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ( 35). இவர் பீளமேடு  பகுதியில் தனியார் கம்பெனியில் விற்பனை யாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு  கரோலின் (31) என்பவருடன் ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் திங்க ளன்று பிரிட்டோ கழுத்து, வயிறு  ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்ட நிலை யில்,  கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

இவரது மரணம் தொடர்பாக வெரைட்டி  ஹால் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.  இதில், ஊரடங்கு காலத்தில் வேலை, வருவாய் இல்லாத நிலையில் பிரிட்டோ தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்து சமாளித்துள்ளார். தற்போது கணவன் வேலைக்கு செல்வ தால் அடகு வைத்த தாலியை மீட்டு தர வேண்டும் என கரோலின் கூறியுள்ளார். இத னால் கடந்த ஒரிரு நாட்களாக இருவருக் கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து திங்க ளன்று மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில் காய் வெட்டும் கத்தியால்  பிரிட்டோவை, கரோலின் குத்தியதால் உயி ரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கரோ லினை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;