புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்க முயற்சி மத்திய அரசிற்கு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் கண்டனம்

கோவை, செப்.29 –  இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழுவை உட னடியாக கலைக்க வேண்டும். இல்லை யென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என திராவிட பண் பாட்டு கூட்டியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செவ்வா யன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 18 ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள் இடம்பெற்றுள்ள திரா விட பண்பாட்டு கூட்டியக்கத்தின் நிர்வாகிகளான வழக்கறிஞர் வெண் மணி, மலரவன், சாஜித், கோவை ரவிக்குமார், நேருதாஸ், ரகுப், இளவே னில் ஆகியோர் கூறுகையில், மத்திய அரசு  12 ஆயிரம் ஆண்டு கால இந்திய  பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழுவை அமைத் ்துள்ளது. இந்த கலாச்சார ஆய்வுக் குழுவில் மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட  செம்மொழிகளின் ஆய்வாளர்கள், பெண்கள், பல மொழிகள் பேசக் கூடிய மக்கள், பல தேசிய இனங்கள், பழங்கு டிகள், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள்,  பல  சமயங்களின் பிரதிநிதிகள் என யாருக் கும் இடமளிக்கப்படவில்லை.   இந்திய ஒன்றியத்தின் கலாச் சாரத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவானது இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மைக்கும், கூட்டாட்சிக்கும், ஜனநாயக கோட் பாட்டிற்கும், சமத்துவத்திற்கும், சமூக  நீதிக்கும் எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை மட்டும் பெரும்பான்மை  உறுப்பினர்களாகக் கொண்டு அமைக் கப்பட்டு உள்ளது.

இது ஆர்எஸ்எஸ் -  பாரதிய ஜனதா கட்சியின் ஒரே இந்தியா,  ஒற்றைக் கலாச்சாரம் என்கிற திட்டத்தின் அடிப்படையில் சமஸ்கிருத மேலாதிக்கத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சா ரத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாறாக கட்டமைப்பதற்கான ஒரு  முயற்சியாகவே நாங்கள் பார்க்கி றோம். இது போன்ற ஒற்றை கொள்கை யுடைய அரசால் அமைக்கப்படும் குழுவானது உண்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும்.   எனவே, இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை,  சமூகநீதி,  கூட் டாட்சி முறைக்கு விரோதமான இந்தக் கலாச்சார ஆய்வுக்குழுவினை கலைக்க திராவிட பண்பாட்டு கூட்டியக்கம்  வலியுறுத்துகிறது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் எங்க ளது கூட்டியக்கம் தொடர் போராட்டத் தில் ஈடுபடும். முதல்கட்டமாக புத னன்று கோவையிலுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூட்டி யிக்கத்தினர் தெரிவித்தனர்..

;