வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துச் சன்னை எம்.ஜி.எம்.மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி உடல் நிலை குணமடைய வேண்டும் எனத் திரைத்துறையினர், ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
 

;