வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தனின் தாயார் காலமானார்

சென்னை, ஜூலை 27 - அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின பொதுச்  செயலாளர் வி.தாயனந்தத்தின் தாயார் வி.பூஷ்ணசுந்தரி உடல்நலக்குறைவால் திங்களன்று (ஜூலை 27)  காலமானார். அவருக்கு வயது 67. சென்னை நங்கநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில்  வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழ்நாடு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை,  சிஐடியு தென்சென்னை மாவட்டச்செயலாளர் பா.பால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில், ஆலந்  தூர் பகுதிச்செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் தில்லை கங்கா நகர்  இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

;