வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

ஹட்சன் பால் நிறுவனத்தை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

சேலம், செப். 26- சேலத்தில் விவசாய நிலங்களை பெரிதும் பாதிக்கும் வகையில் நச்சுத்தன்மை கலந்த கழிவு நீரை வெளியேற்றும் ஹட்சன் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவ தாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், காரிப்பட்டியை தலைமையிடமாக கொண்டு தமிழகமெங்கும் 14 கிளைகளுடன் ஹட்சன் நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் அருகே தலைவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஹட்சன் நிறு வனத்தில் இருந்து நச்சுத்தன்மை கலந்த கழிவுநீர் சுத்தி கரிக்கப்படாமல், ஆழ்துளை கிணறு அமைத்து வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதனால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்லமுத்து, மாநிலச் செய லாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமுள்ள விவசாய நிலங்கள் பாலைவன மாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தலைவாச லில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை பாதிக்கும் ஹட்சன் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

;