புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

கொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.29- கொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் கந்தம் பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்த வேண்டும். பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து உள்ள ஆட்டோ தொழிலா ளர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணமாக வழங்கிட வேண்டும். கொரோனா காலம் முடியும் வரை எஃப்.சி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சாலை வரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட செயலாளர் எம்.நாக ராஜ் தலைமை வகித்தார். இதில்  மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், மாவட்ட துணைச் செயலா ளர் ஏ.கோவிந்தன், சிஐடியு தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் கோட்ட பொது செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச்செய லாளர் செந்தில்குமார், ஆட்டோ சங்க  பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு  கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;