ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

மாவட்டங்கள்

img

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாடம் நடத்த முடிவு

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், விவசாயிகள், தொழி லாளர்களுக்கு எதிரான திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து சேலம் மாவட்டம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐ டியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப் பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சனியன்று சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.வெங்கடபதி, விவசாயிகள் சங்கச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;