புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பென்னாகரம், செப்.29- பென்னாகரம் சமத்துவபுரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா  வழங்கக்கோரி அப்பகுதி பொது மக்கள் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் சமத்துவபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு குடியிருப்பவர்களின் வீடுக ளுக்கு இதுநாள் வரையில் பட்டா  வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் தற்போது  வரை பட்டா வழங்க உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை  என கூறப்படுகிறது.  இந்நிலையில், இங்கு குடியிருப் பவர்களுக்கு உடனடியாக பட்டா  வழங்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி மக்கள் வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்த தகவலறிந்து வந்த பென்னாகரம் வட்டாட்சியர் சேது லிங்கம் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மேற்கண்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

;