புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

சாக்கடை கால்வாய், தார்சாலை பணிகளை விரைந்து முடித்திடுக அம்மாபாளையம் மக்கள் கோரிக்கை

அவிநாசி, செப்.29- அவிநாசி ரோடு அம்மாபாளையத்தில் சாக்கடை கால்வாய் பணியையும், தார் சாலை பணியையும் விரைந்து முடிக்க மாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ரோடு  அம்மாபாளையம் அம்மன் மஹால்  செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வேலையும், தார்சாலை அமைக் கும் பணியும் நடைபெற்று வருகிறது. இத னால் சாக்கடை தண்ணீர் செல்வதற்கு மாற்று வழி இல்லாததால், அருகில் குடியி ருக்கும் வீட்டுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள் ளது.  இதேபோல் சிட்டி கிளப் அருகில் அவி நாசி மெயின் ரோட்டிலும் சாக்கடைத் தண்ணீர் தேங்கி உள்ளது.  இதனால் சுகா தார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள்  பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்ற னர். எனவே, தார்சாலை வேலைகளையும், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை யும் விரைந்து முடிக்க வேண்டும் என அப்ப குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;