வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

வீடு புகுந்து கொள்ளை முயற்சி - இருவர் கைது

திருப்பூர், செப். 27- திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவர்  கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலையத் திற்குட்பட்ட ஆண்டிபாளையம், சின்னிய கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (44). இவரது, வீட்டிற்கு கடந்த செப்.22 ஆம் தேதியன்று 35 வயதுடைய பெண் ஒருவர் தான் அங்கன்வாடி ஊழியர் எனவும், கொரோனா பரிசோதனை கணக் கெடுப்பு பணிக்கு வந்துள்ளதாக கூறி ஆதார் விவரங்களை கேட்டு வீட்டில் யாரெல் லாம் உள்ளார்கள் என்று நோட்டமிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மறு நாள் ஆண் நபர் ஒருவருடன் மீண்டும் ஆதார்  கார்டு விவரங்களை சேகரிப்பதாகக் கூறி சென்றுள்ளார்.

அப்போது தீடீரென சாந்தா மணியைக் கத்தியால் குத்தி நகையை பறிக்க இருவரும் முயற்சி செய்துள்ளனர். இதை யடுத்து சாந்தாமணி சத்தம் போட அருகில்  உள்ளவர்கள் ஓடிவர இருவரும் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் சாந்தாம ணியின் இடது கையில் காயம் ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருப்பூர் கே.வி.ஆர் நகர், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த சத்ய பிரியா (35), திருப்பூர் பாளையக்காடு குழந் தையப்பா நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

;