புதன், அக்டோபர் 28, 2020

மாவட்டங்கள்

img

அவிநாசியில் ரத்த தான முகாம்

அவிநாசி, செப். 29- அவிநாசியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் அவிநாசி கங்கவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் சி.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இம்முகாமை அவிநாசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நவநீதகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், சுதந்திரப் போராட்டத் தியாகி வாரிசு கருவலூர் ஹரி பிரசாத், களஞ்சியம் விவசாய சங்க ஒருங்கிணைப் பாளர் சுப்பிரமணி, வழக்கறிஞர்கள் பிரபாக ரன், திருமூர்த்தி, முத்துக்குமார், மகாலட் சுமி, மருத்துவர் பானுமதி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஒன்றிய தலைவர் பழனிசாமி, விக்னேஷ் ஆகியோர் வாழ்த்தினர். முகாமில் 33 பேர் ரத்ததானம் செய்து அரசு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட் டது.  இதனைத் தொடர்ந்து களஞ்சியம் விவசாய சங்கத்துடன்  இணைந்து  ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை பரிசோதனை அனைத்து மக்களுக்கும் இலவசமாக நடத் தப்பட்டது.

;