புதன், அக்டோபர் 28, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் மூவருக்கு கொரோனா பாதிப்பு

அவிநாசி, ஜூலை 18 - அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் 13 வயது சிறுவன் உட் பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருச்சியிலிருந்து கடந்த ஜூன் 14ஆம் தேதி யன்று 13 வயது சிறுவன் வந்துள்ளான். இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக சிறுவனுக்கு காய்ச்சல் இருந் துள்ளது. இதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் சளி, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சனி யன்று வெளியான பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இதேபோல் சேவூர் அருகே திருமலைநகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்த 66 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அவிநாசி பழங்கரை அருகே ஆயிக்கவுண்டம் பாளை யத்தில் உள்ள 46 வயது பெண்ணிற்கும் கொரோனா நோய்த்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவிநாசியில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து நோய்த்  தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

;