புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

மருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தொற்று - அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

அவிநாசி, செப்.29- அவிநாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்பட 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட  50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின் றனர். இந்நிலையில் இம்மருத்துவமனை யில் கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்து வர், 5 செவிலியர் உள்பட 6 பேருக்கு திங்களன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவிநாசி அரசு  மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட் டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

;