புதன், அக்டோபர் 28, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் 67 நாட்களுக்குப் பின்பு கொரோனா பாதிப்பு

அவிநாசி, ஜூன் 25- அவிநாசியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நப ருக்கு புதனன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் 67 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று அவிநாசியில் கண்டறியப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வடுகபா ளையம், ராயகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபருக்கு உடல்நலம் குன்றி யுள்ளது. இதனைத்தொடர்ந்து புதனன்று திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரி சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவர் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய் மைப்பணிகள் மேற்கொண்டனர்.

மேலும், அவரது குடும்பத்தார் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த வர்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொற்று இல்லா மல் இருந்த அவிநாசியில் தற்போது தொற்று ஏற்பட் டது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

;