செவ்வாய், அக்டோபர் 20, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

அவிநாசி, ஜூலை 2- அவிநாசியில் இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று ஏற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்கனவே 29 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக் கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலை யில், கடந்த வாரம் மீண்டும் அவிநாசியில் 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் கொரோனா நோய்த்தொற் றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், அவிநாசி நாராசா வீதியில் உள்ள 59 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், திருமுருகன்பூண்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் நபருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டதையடுத்து அவர் இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

;