புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் தம்பதியருக்கு கொரோனா தொற்று

 அவிநாசி, ஜூலை 7- அவிநாசியில் அருகே உள்ள சூளையில் கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி அருகேயுள்ள சூளை பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவ ரும் கடந்த சில நாட்களுக்கு முன் திண்டுக்கல்லிற்கு சென்றுவிட்டு அவிநாசிக்கு திரும்பியுள்ளனர். இதைய டுத்து அவர்கள் தனிமைப்ப டுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டது. இதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்  டது. இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, சிகிச் சைக்காக கோவையி லுள்ள தனியார் மருத்துவம னையில் அனுமதிக்கப் பட்டனர்.

;