வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்திடுக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மனு

திருப்பூர், செப். 26- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு சிறப்பு பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக முதல்வ ருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்தனர். இதுதொடர்பாக திருப் பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.சாகுல் ஹமீதுவிடம், சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.தயா னந்தன், மாவட்டச் செயலாளர் ச.முருக தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ப.தங்க வேல் ஆகியோர் அளித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங் களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய் தொற்றில் பாதிக் கப்பட்டுள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், தமிழக அரசு ஏற்க னவே வெளியிட்ட அரசாணைப்படி கரு ணைத் தொகையாக ரூ.2 லட்சத்தை வழங் கிட வேண்டும். வருவாய்த்துறையில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மனுவில் வலியுறுத் தப்பட்டிருந்தன.

;