வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

விவசாயிகள் போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு

திருப்பூர், செப். 27- திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் சனியன்று பெருமாநல்லூர் சாலையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்  மசோதா சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் மதசார்பற்ற கட்சிகள் மற்றும்  விவசாயிகள் சார்பில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இப்போராட்டங்களில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், சிஐடியு, எல்பிஏஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;