செவ்வாய், அக்டோபர் 20, 2020

மாவட்டங்கள்

img

கொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

திருப்பூர், ஜூலை 7 - கொரோனா ஊரடங்கினால் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொரோனா ஊரடங்கு காலத் திற்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரண உணவுப் பொருள் கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். அத்துடன் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனா ளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஏற்கெனவே அரசு அறிவித்த நிவார ணம் ரூ.1000-த்தை மாற்றுத்திறனாளி களின் வீடுகளுக்கு சென்று நேரில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் தலைமையில் செவ் வாயன்று தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் காங் கேயம் சாலை அரசுப் பேருந்து பணி மனை, கரட்டங்காடு பஸ் நிறுத்தம், புதூர் பிரிவு பேருந்து நிறுத்தம், வெள்ளி யங்காடு நால்ரோடு, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் செவந்தம்பாளையம் தெற்கு வட்டாட் சியர் அலுவலகம், ஊத்துக்குளி, குன் னத்தூர், வடக்கு ஒன்றியம், திருமுரு கன் பூண்டி உட்பட ஏராளமான பகு திகளில் இந்த கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஜெய பால், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  சேலம்

சேலம் மாவட்டத்தில் நா.ஆரியபா ளையம், உமையாள்புரம், மணக்காடு, தாண்டானூர், மேட்டூர் வருவாய் வட் டாட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிக ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலசங் கத்தின் மாவட்ட இணை செயலாளர் ஏ.கந்தன், நிர்வாகி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

தருமரி

தருமபுரி மாவட்டத்தில் தரும புரி, பென்னாகரம் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டச் செய லாளர் கருவூரான், மாவட்ட துணைத் தலைவர் ஜி.தமிழ்செல்வி உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.

கோவை

கோவை மாவட்டம், கூளநாயக் கன்பட்டி, திப்பம்பட்டி, சீலக்காம் பட்டி  பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சூளேஸ்வரன் பட்டி பூசாரிப்பட்டி, கோமங்கலம், ஊஞ்சவேலாம்பட்டி, நல்லாம்பள்ளி, ஆனைமலை, கோட்டூர், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மாற் றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சேதுராமன், விஜயகுமார், பாலு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பட்லூர் ஊராட்சி அலுவலகம், வெள் ளித்திருப்பூர் ஊராட்சி அலுவலகம், பச்சாம்பாளையம் ஊராட்சி அலுவல கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளி கள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப் பினர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகைளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

;