புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

ஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபர்கள் கைது

அவிநாசி, செப்.29- அவிநாசியில் பொக்லைன் ஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதி யைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (35).  கேரள மாநிலத்தில் பொக்லைன் ஓட்டுந ராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த  23ஆம் தேதி இரவு அவிநாசி அரசு கல்லூரி  அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரை பின் வந்து கொண்டிருந்த  மர்ம நபர்கள் காரை முந்த முற்பட்டுள்ள னர். அப்போது ஏற்பட்ட தகராறில் தட்சணா மூர்த்தியின் இடது கையை கத்தியால் வெட் டிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். இத னையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அவிநாசி காவல் துறையினர், தனிப்படை அமைத்து, சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு வழக் கில் தொடர்புடையவர்களைத் தேடி வந்த னர்.  இந்நிலையில் ஞாயிறன்று, அவிநாசி செங்காளிபாளையம் அருகே சென்ற காரை  நிறுத்தி விசாரித்ததில் மேற்கண்ட வழக்கில்  தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கேரளா கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதன் (எ )முகமதுசபீர் (29), பல்லடம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30), திருப்பூர் கேஎன்பி காலனி பகுதியைச் சேர்ந்த மர்ஜித் (30) ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

;