புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் பள்ளி மாணவன் தற்கொலை

அவிநாசி, செப்.29 -  அவிநாசியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட  சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(42). இவ ருக்கு மனைவி பிரதிபா(37) மற்றும் 3 மகன்கள் உள்ள னர். மூத்த மகன் சஞ்சய் (15).  அவிநாசி அருகே நாதம்பா ளையம் தனியார் பள்ளியில்  10ஆம் வகுப்பு படித்து  வருகிறார். தற்போது கொரோனா பொதுமுடக் கம் காரணமாக சஞ்சய்க்கு  பள்ளியில் இருந்து இணையவழி வகுப்பு நடை பெற்று வருகிறது.  ஆனால் சஞ்சய் இணையவழி வகுப்பில் சரிவர பயிலா மல், விளையாடிக் கொண்டி ருந்ததால், பெற்றோர்  அவரைக் கண்டித்துள்ள னர். இதனால் மனமுடைந்த அம்மாணவன் திங்களன்று காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

;