புதன், அக்டோபர் 21, 2020

மாவட்டங்கள்

img

தற்காலிக கிராவல் மண் குவாரிகள் அமைத்திடுக டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர், செப்.29- திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக தற்காலி கமாக கிராவல் மணல் குவாரி  அமைத்து கிராவல் மணல்  எடுக்க அனுமதி அளிக்கு மாறு டிப்பர் லாரி ஓட்டுநர் கள் மற்றும் உரிமையா ளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர். இம்மனுவில் மேலும் கூறியிருப்பதா வது, கொரோனா வைரஸ் பரவலை தவிர்க் கும் வகையில் கடந்த சில மாதங்களாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், மணல் எடுக்கவும், கிராவல் மண் ஏற்றி போக்குவரத்து செய்யவும் அனு மதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே,  திருப்பூரில் முறையான அனுமதி பெற்ற கிரா வல் மணல் குவாரிகள் இல்லாததால், மாவட்ட நிர்வாகம் தாலுகா வாரியாக  தற்காலிக கிராவல் மணல் குவாரிகள் அமைத்து மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

;