வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

அவதூறு, பொய்வழக்கு போடும் ஆய்வாளர்: கண்டித்து ஆக. 13ல் சிபிஎம் போராட்டம்

திருவள்ளூர், ஆக. 4-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், முன்னணி ஊழியர்களையும் தரக்குறைவாக சமூக வலைத்தளத்தில் பதிவிடும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்காத பெரியப்பாளை யம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து  ஆக.13 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிரா மத்தில் வசிக்கும் முருகன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மற்றும்  வட்டக் குழு உறுப்பினர், பீடி சுற்றும் தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளார். நீண்ட கால மாக ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முருகன் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் மீது  அவதூறு பரப்பும் வகையில், அதே பகு தியை சேர்ந்த பாரதி சமூக வலைத்தளத்தில் தரக்குறைவான வார்த்தைகளில், ஆதார மில்லாத குற்றச்சாட்டுகளை பரப்பி வரு கிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரியிடம்  ஜூலை 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவ டிக்கை எடுக்காத ஆய்வாளர், புகார் கொடுத்த  முருகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொய்  வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை யின் இந்த அராஜக செயலை கண்டித்து வரும்  ஆக.13 அன்று பெரியபாளையத்தில்  ஆர்ப்  பாட்டம் நடைபெறுகிறது.

;