வியாழன், செப்டம்பர் 24, 2020

மாவட்டங்கள்

img

மின் கட்டண உயர்வைக் கண்டித்து வாலிபர்கள் போராட்டம்

பொது முடக்க காலத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.  பெட்ரோல், டீசல் விலையும் நாள்தோறும் உயர்த்தப்படுகிறது. மின் கட்டண உயர்வையும், பெட்ரோல் , டீசல் விலை உயர்வை  வாபஸ் பெறக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் எம்.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தீ.பாண்டீஸ்வரன், ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;