வியாழன், அக்டோபர் 22, 2020

வானிலை

img

ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சென்னை பெருநகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;